May 01, 2019 07:14 AM

இன்று முதல் ‘தேவராட்டம்’ அதிரடி ஆரம்பம்!

இன்று முதல் ‘தேவராட்டம்’ அதிரடி ஆரம்பம்!

குடும்ப உறவுகள்ம் மற்றும் கலாச்சாரம் பேசும் அதிரடி ஆக்‌ஷன் படங்களைக் கொடுத்து தொடர் வெற்றி பெறும் இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவராட்டம்’.

 

ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜாவின் 15 வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் இன்று (மே 1) உலம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

தற்போது தமிழகத்தில் நடந்த பல பெண்களுக்கு எதிரான பாலியன் வன்கொடுமைகள் பற்றி படத்தில் பேசியிருப்பதோடு, பெண்களை தொட்டால் என்ன ஆகும், என்பதை குடும்ப உறவுகளுடனுடம், கலாச்சார பின்னணியிலும், அதே சமயம், அதிரடியான ஆக்‌ஷம் உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் விஷயங்களுடனும் சேர்த்து இயக்குநர் முத்தையா சொல்லியிருக்கிறார்.

 

Devarattam

 

‘குட்டி புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடி வீரன்’ என்று தனது தொடர் வெற்றிப் படங்களின் பாணியிலேயே இப்படத்தையும் இயக்கியிருக்கும் முத்தையா ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் கெளதம் கார்த்திக்கை வேறு ஒரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.