ஐஸ்வர்யா ராஜேஷுக்காக கொள்கையை தளர்த்திய முன்னணி ஹீரோ!

இளம் வயதிலேயே தைரியமாக அம்மா வேடத்தில் நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கனா’ படத்திற்குப் பிறகு பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, நயன்தாராவின் பினாமி நிறுவனம் என்று சொல்லக்கூடிய கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறாராம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வருவது போன்ற ஒரு சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி வருகிறாராம்.
நண்பர்களுக்காக பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி, ஒரு கட்டத்தில் அலுத்துப்போய், இனி சிறப்பு தோற்றம், கெளரவ தோற்றம் என்று எதிலும் நடிக்கப் போவதில்லை என்ற முடிவு எடுத்ததோடு, அப்படி ஒரு எண்ணத்தில் தன்னை தேடி வருபவர்களிடம் கராராக நோ சொல்லி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷுக்காக தனது கொள்கையை தளர்த்தியிருக்கும் விஜய் சேதுபதி, வேறு யாராவது கெளரவ வேடம் என்று தனது கதவை தட்டினால், திறக்க மாட்டாராம். இது ஒன்லி ஒன் ஐஸ்வர்யா ராஜேஷுக்காக மட்டுமே.