Aug 30, 2019 05:12 AM

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய முக்கிய நடிகர்!

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய முக்கிய நடிகர்!

அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதோடு, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால், அன்றைய தினத்தில் படங்களை ரிலீஸ் செய்வதில் முன்னணி நடிகர்கள் பலர் மும்முரம்காட்டி வருகிறார்கள்.

 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படம் தொடங்கியபோதே தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படம் தீபாவளிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்தது. விஜய் படத்துடன் விஜய் சேதுபதியின் படம் மோதுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்த ஆச்சர்யமாக கார்த்தியின் ‘கைதி’ படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.

 

இதனால், தீபாவளி ரேஸ் கடும் போட்டிக்குள்ளாகிய நிலையில், இந்த மூன்று படங்களுக்குமான திரையரங்கங்கள் கைப்பற்றும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜயின் ‘பிகில்’ மிகப்பெரிய அளவில், இதுவரை எந்த படமும் வெளியாத அளவுக்கு அதிகமான ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகும், என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.

 

இந்த நிலையில், தீபாவளி ரேஸில் இருந்து விஜய் சேதுபதியின் படம் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. விஜயுடன் மல்லுக்கட்ட முடியாமல் விஜய் சேதுபதி பின் வாங்கியிருக்கிறார். மேலும், சரியான திரையரங்கங்கள் கிடைக்காததால் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றும்படி, தயாரிப்பாளரிடம் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டாராம்.