Sep 29, 2019 07:08 AM

பின் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

பின் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 3 95 நாட்களை கடந்துவிட்ட நிலையில் வரும் வாரத்துடன் போட்டி முடிவடைய உள்ளது. தற்போது தர்ஷன், முகேன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி என ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், முகேன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டார்.

 

இதற்கிடையே, சாண்டியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். அதே சமயம், கவின் வெளியேறினாலும் இந்த வாரம் ஒருவர் எலிமினேட் ஆகப்போவது உறுதி என்றும் கமல் அறிவித்துள்ளார். அந்த ஒருவர் யார்? என்பது தான் பிக் பாஸ் ரசிகர்களின் கேள்வி.

 

சாண்டி மற்றும் முகேன் இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டதால் மீதமுள்ள தர்ஷன், லொஸ்லியா, ஷெரீன் ஆகியோரில் ஒருவர் இன்று வெளியேற உள்ளனர். அதன்படி தர்ஷன் தான் இன்று வெளியேற்றப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. பிக் பாஸ் போட்டியின் முக்கிய போட்டியாளரான தர்ஷன், இறுதிப் போட்டிக்கு செல்வதோடு, டைடிலும் வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

 

ஆனால், இது உறுதியான தகவல் இல்லை என்றாலும், சுமார் 80 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் பெண் போட்டியாளராக இருக்க வேண்டும் என்பதனாலேயே தர்ஷன் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், லொஸ்லியா இறுதிப் போட்டிக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது.

 

Loslya and Darshan

 

ஆனால், மற்றொரு தகவல்படி ஷெரீன் தான் இன்று வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.