Aug 17, 2019 04:06 AM

உலகின் மிகவும் அழகான ஆண்! - உலக பிரபலங்களை வீழ்த்திய இந்திய நடிகர்!

உலகின் மிகவும் அழகான ஆண்! - உலக பிரபலங்களை வீழ்த்திய இந்திய நடிகர்!

உலகின் மிகவும் அழகனா ஆண் யார்? என்ற தலைப்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் உலக பிரபலங்கள் பலரை வீழ்த்தி இந்திய திரைப்பட நடிகர் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

 

’டாப் 5 மோஸ்ட் ஹண்ட்சம் மென் இன் தி வார்ல்ட் இன் ஆகஸ்ட் 2019’(Top 5 Most Handsome Men In The World in August 2019) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், பல ஹாலிவுட் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள் மட்டும் இன்றி உலக அளவில் பிரபலமாக இருக்கும் விளையாட்டு வீரர்களையும் வீழ்த்தி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

 

Hirthik Roshan

 

இதில், கிரிஸ் ஈவன்ஸ் (Chris Evans) இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் (David Beckham) ராபர்ட் பேட்டின்சன் (Robert Pattinson) உள்ளிட்ட உலக புகழ் பெற்றவர்களை ஹ்ரித்திக் ரோஷன் அதிக வாக்குகள் பெற்று வீழ்த்தியுள்ளார்.

 

‘சூப்பர் 3’ படத்தை தொடர்ந்து ‘வார்’ என்ற படத்தில் நடித்து வரும் ஹ்ரித்திக் ரோஷன் அப்படத்தில் பல அதிரடியான சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.