பூங்காவில் வைத்து வெளியிடப்பட்ட ‘பூங்கா’ திரைப்பட இசை!

அழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பூங்கா’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.தனசேகர் இயக்கும் இப்படத்தில் நாயகனாக கெளசிக் நடிக்கிறார். நாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நொயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குநர் கே.பி.தனசேகர்.
நான்கு இளைஞர்கள் பிரச்சனைகளோடு ஒரு பூங்காவிற்கு வருகிறார்கள், அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பது தான் ‘பூங்கா’ திரைப்படத்தின் கதை.
ஆர்.ஹெச்.அசோக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அகமது விக்கி இசையமைத்துள்ளார். முகன் வேல் படத்தொகுப்பு செய்ய, குணசேகர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். எஸ்.ஆர்.ஹரி முருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சுரேஷ் சித் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். பி.ஆர்.ஓவாக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
இந்த நிலையில், ‘பூங்க’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில், ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த ‘லவ் டுடே’ பட இயக்குநர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
மேலும், படத்தின் தலைப்புக்கு ஏற்ப பரணி ஸ்டுடியோவில் உள்ள பூங்காவில் வைத்து ‘பூங்கா’ திரைப்படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.