Jul 27, 2019 07:06 AM

’பிகில்’ படத்திற்கு வந்த புது சிக்கல்! - சோகத்தில் இயக்குநர் அட்லீ

’பிகில்’ படத்திற்கு வந்த புது சிக்கல்! - சோகத்தில் இயக்குநர் அட்லீ

‘தெறி’, ‘மெர்சல்’ என விஜயை வைத்து இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக ‘பிகில்’ மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக உருவாகி வரும் இப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதனால், இந்த படமும் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக அமைவது உறுதியாகியுள்ளது.

 

இப்படி என்ன தான் பெரிய வெற்றியை கொடுத்தாலும், சொன்ன தேதியில் படத்தை முடிக்காமல், படத்தின் பட்ஜெட்டையும் அதிகப்படுத்தக் கூடியவர் இயக்குநர் அட்லீ, என்ற அவப்பெயர் அவருக்கு ஏற்பட்டுள்ளது. தனது இந்த தவறான இமேஜை உடைக்கும் வகையில் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதமே முடித்துவிட வேண்டும் என்ற முடிவால், இரவு பகல் பாராமல் இயக்குநர் அட்லீ உழைத்து வருகிறார்.

 

படம் குறித்து, கதை குறித்து சில பிரச்சினைகள் எழுந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் படத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்ற முடிவில் இயக்குநர் அட்லீ உழைத்ததால் படமும் விரைவில் முடியும் நிலையை எட்டியது. ஆனால், தற்போது ஏற்பட்ட சிக்கலால், படத்தை ஆகஸ்ட் மாதம் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

அதாவது, படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்குவதற்காக ஸ்டண்ட் இயக்குநர் 22 நாட்கள் வேண்டும், என்று கேட்டிருக்கிறாராம். அனைத்து வேலைகளையும் விரைவாக முடித்த இயக்குநட் அட்லீக்கு ஸ்டண்ட் இயக்குநர் கேட்ட நாட்கள் மட்டும் பெரும் அதிர்ச்சியளித்திருக்கிறது.

 

Bigil

 

மற்றபடங்களில் ஏற்பட்ட கெட்டப் பெயரை போக்க வேண்டும் என்பதற்காக, தான் இரவு பகல் பாராமல் உழைத்தது அனைத்தும் வீணாகிவிட்டதே, என்று அட்லீ கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.