Jul 25, 2019 04:00 PM

’களவாணி 2’ வில்லனை அரசியல்வாதியாக்கிய பொதுமக்கள்!

’களவாணி 2’ வில்லனை அரசியல்வாதியாக்கிய பொதுமக்கள்!

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள்.

 

இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம்.

 

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், துரை சுதாகர் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் பேசும் வசனத்திற்கு ஆரவாரமாக கைதட்டுகிறார்கள்.

 

Durai Sudhakar

 

இப்படி, வில்லனாக நடித்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்திருக்கும் துரை சுதாகர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்கங்களுக்கு சென்ற போது அவரை சூழ்ந்துக் கொண்ட மக்கள், “எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் தலைவரே...” என்றும் கோஷமிடுகிறார்களாம்.

 

தற்போது, வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், படப்பிடிப்பில் இருந்தாலே அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடிவிட, ஒரே தேர்தல் கோஷங்களாகவே எழுகின்றதாம்.

 

முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும், என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை, பொது மக்கள் அரசியல்வாதியாக ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு ‘களவாணி 2’ வில் அவர் நடித்த ஊராட்சி தலைவர் கதாபாத்திரமும், அவரது நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்களிடம் ரீச் ஆகியிருக்கிறது.

 

Kalavani 2 Poster Durai Sudhakar