Feb 16, 2019 06:44 AM
சிம்பு குடும்பத்தில் மதமாற்றம்! - டி.ராஜேந்தர் முன்னிலையில் நடைபெற்றது

நடிகரும், இயக்குநரும் அரசியல் தலைவருமான டி.ராஜேந்திரனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். இதில் ஒரு மகன் சிம்பு, சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராக இருக்கிறார். திரைப்படத்திலும் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், டி.ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா ஆகியோரது முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.
ஆன்மீகம் மற்றும் ஜாகத்தில் அதிக நம்பிக்கை உடைய டி.ராஜேந்தர் இஸ்லாம் மதத்தின் மீது அதிகம் ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.