கேள்வி கேட்ட நிருபர்! - ஜட்டியுடன் நின்று அதிர்ச்சியளித்த பிரபல நடிகர்

ஒரு படம் வெற்றியடைய கதை மற்றும் நடிகர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியமானதாக புரோமோஷன் தேவைப்படுகிறது. இதனால், தற்போது ரிலிஸாகும் படங்கள் வித்தியாசமான முறையில் புரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கில் விரைவில் வெளியாக உள்ள ‘ஹிப்பி’ (Hippi) என்ற படத்தின் புரோமோஷன் நிகழ்வில், நிருபர் கேட்ட கேள்வியால் படத்தின் ஹீரோ கார்த்திகேயாவும், முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பிரபல குணச்சித்திர நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தியும் தங்களது ஆடைகளை கழட்டி எறிந்துவிட்டு ஜட்டியுடன் நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’ஆர்.டி எக்ஸ்’ (RX 100) என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமான கார்த்திகேயா தற்போது டி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹிப்பி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹீரோ கார்த்திகேயாவும், ஜே.டி.சக்கரவர்த்தியும் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டார்கள். அந்த நேர்காணலின் இறுதியில், ”‘ஹிப்பி’ என்றா என்ன?” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் ஏதும் சொல்லாத நிலையில் ஹீரோ கார்த்திகேயா தனது சட்டையை கழற்றி வீச, நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி தனது பேண்டை கழட்டி வீசிவிட்டு ஜட்டியுடன் நின்றார். இவர்களது இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், இதன் மூலம் படத்திற்கு பெரிய விளம்பரம் கிடைத்திருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த அந்த ஆண்களின் அரைநிர்வாண புகைப்படம்,