Feb 11, 2020 12:17 PM

சும்மா இருந்த விஜயை மேலே ஏறி நிற்க வைத்த ரைடு!

சும்மா இருந்த விஜயை மேலே ஏறி நிற்க வைத்த ரைடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், தற்போது தமிழகத்தின் முக்கிய நபராக உருவெடுத்து வருகிறார். தனது படங்களில் அரசியல்வாதிகளையும், அரசு திட்டங்களையும் விமர்சிக்கும் வகையில் வசனம் பேசும் விஜய், சில நேரங்களில் தனது படத்தின் நிகழ்ச்சிகளிலும் சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் பேசி வருகிறார்.

 

விஜயின் இந்த பேச்சால் அவருக்கு அரசியல் ரீதியிலான சில நெருக்கடிகள் வந்தாலும், அவற்றையே தனது முன்னேற்றத்திற்கான படி கட்களாகவும் அவர் மாற்றி மாஸ் காட்டி வருகிறார்.

 

அந்த வகையில், சமீபத்தில் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரைடு மற்றும் விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்து வந்தது, போன்ற சம்பவங்களால் விஜயின் மதிப்பு குறையும் என்று சிலர் எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது அந்த பிரச்சினையால் விஜயின் மதிப்பும், அவருக்கு பின்னால் இருக்கும் மக்கள் கூட்டமும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.

 

தற்போது நெய்வேலியில் படப்பிடிப்பில் இருக்கும் விஜயை காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் சந்தித்து விஜயும் கைகாட்டுகிறார். தினால் மகிழ்ச்சியடையும் ரசிகர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து நெய்வேலிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

 

அப்படி ஒரு நாள் விஜயை பார்க்க வந்த ரசிகர்களை விஜய் காண்பதற்காக வேன் ஒன்றின் மீது ஏறி கை அசைத்ததோடு, வந்திருந்த கூட்டத்தை ஒரு செல்பி எடுத்தார். அந்த செல்பியை, ‘நன்றி நெய்வேலி” என்ற பதிவோடு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் வெளியிட, அந்த புகைப்படம் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.

 

விஜய் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு லைக்குகளை விட அதிக லைக்குகளும், ரீட்விட்டுகளையும் பெற்று வரும் அந்த புகைப்படம் மட்டும் இன்றி, இயக்குநர் அமீர், நடிகர் கருணாஸ் உள்ளிட்ட சினிமாத் துறையிலும், அரசியலிலும் ஈடுபட்டிருக்கும் பல பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

 

மொத்தத்தில், விஜயை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட வருமானவரித் துறை சோதனை, விஜயை அடுத்தக் கடத்திற்கு உயர்த்தவும், அவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவை வெளிக்காட்டுவதற்கான கருவியாக மாறிவிட்டதாக அரசியல் ஆர்வலகர்கள் பேசி வருகிறார்கள்.