Sep 16, 2025 07:50 PM

ஜித்தன் ரமேஷின் 16 வது படம் ‘ஹிட்டன் கேமரா’ படப்பிடிப்பு தொடங்கியது

ஜித்தன் ரமேஷின் 16 வது படம் ‘ஹிட்டன் கேமரா’ படப்பிடிப்பு தொடங்கியது

ரிலாக்ரோ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார். இது இவரது 16 வது திரைப்படமாகும். இதில், நாயகியாக கிருஷ்ணா தவே நடிக்கிறார். தயாரிப்பாளர் ஷாம்ஹும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் அப்புகுட்டி, காதல் சுகுமார்,  டாக்டர் பி.என்.முகமது பெரோஸ், சூர்யா, திரவிய பாண்டியன், மீனு, ஸ்மிதா, பேபி அதிதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

'உயிரும், நேரமும் ஒரு முறை போனால், திரும்ப வராது' என்ற கருவை மையமாக வைத்து, த்ரில்லர், ஆக்‌ஷனுடன் ஜானர் திரைப்படமாக உருவாகும் ‘ஹிட்டன் கேமரா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன், சென்னை பிரசாத் லேபில் தொடங்கியது. இதில், ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். மேலும், படம் மாபெரும் வெற்றியடைய பிராத்தனைகள் செய்து, தோரணமலை முருகன் கோவில் அறங்காவலர் செண்பகராமன் படக்குழுவினர் அனைவரும் அருட்பிரசாதம் வழங்கினார்.

 

திரைக்கதை வசனம் எழுதி அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்திற்கு வி.எஸ்.சஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீனிகேத் விஷால் இசையமைக்க, அருண் சாக்கோ கதை எழுதியுள்ளார். எடிட்டிங் அர்ஜூன் ஹரிந்ரநாத், பாடல்கள் ஆர்.டி.உதயகாந்த், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ரிலாக்ரோ புரொடக்சன்ஸ் சார்பில், ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

 

சென்னை, கொடைக்கானல், நாகர்கோவில், கேரளா, வியட்நாம் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில், படம் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.