May 04, 2019 04:25 AM

மாணவர்கள் செய்த கலாட்டா! - ரஜினியின் ’தர்பார்’ படப்பிடிப்பு நிறுத்தம்

மாணவர்கள் செய்த கலாட்டா! - ரஜினியின் ’தர்பார்’ படப்பிடிப்பு நிறுத்தம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

 

இதற்கிடையே, படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு, படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளும், இதுபோன்று புகைப்படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதையடுத்து, படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிடுவது யார்? என்ற இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விசாரிக்கையில், அந்த கல்லூரி மாணவர்கள் சிலர், தங்களது செல்போனில் போட்டோ எடுத்து வெளியிடுவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்ட படக்குழுவினர் மாணவர்களிடம் அறிவுறுத்த கூறியிருக்கிறது.

 

இதை அறிந்த மாணவர்கள் கோபப்பட்டு, படப்பிடிப்பு நடக்கும் போது கற்களை வீசியிருக்கிறார்கள். முதலில் இதை படக்குழுவினர் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், மாணவர்கள் தொடர்ந்து கல் வீச, அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்களாம்.

 

தற்போது படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்திருக்கும் ‘தர்பார்’ குழு, அதற்கான லொக்கேஷன்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.