Oct 11, 2025 04:34 AM

‘தேசிய தலைவர் - தேவர் பெருமான்’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி

‘தேசிய தலைவர் - தேவர் பெருமான்’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி

எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் திரைப்படம் ‘தேசிய தலைவர் - தேவர் பெருமான்’.

 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை நேற்று கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில், இசைஞானி இளையராஜா வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார். 

 

தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் ஜே.எம்.பஷிர் தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech, பழனிவேல், மூர்த்தி தேவர், ராஜ் மோகன்,ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

Thesiya Thalaivar Audio Launch

 

பிறகு மாலை பிரசாத் லேபில் பிரமாண்ட விழாவாக ‘தேசிய தலைவர் - தேவர் பெருமான்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மேகஞி, அரவிந்தராஜ், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, நடிகை கெளதமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, நடிகர் ஆர்.கே.சுரேஷ், கவிஞர் சினேகன், நூலாசிரியர் தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.