Aug 08, 2019 05:58 AM

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா கூறிய மனம் கவர்ந்த தோழி! - இவர் தான்

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா கூறிய மனம் கவர்ந்த தோழி! - இவர் தான்

பிக் பாஸ் போட்டியில் நேற்றைய எப்பிசோட்டில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில், அவர் அவர், தங்களுக்கு பிடித்த அன்பானவர்களை பற்றி பேச வேண்டும், என்று கூறப்பட்டது.

 

அந்த வகையில் லொஸ்லியா, தனக்கு பிடித்தவராக தனது தோழி தர்ஷி கிருபா பற்றி கூறினார். தனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால், தனக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாக அவள் வந்து நிற்பால், என்று தோழியை பற்றி புகழ்ந்து கூறியிருந்தார்.

 

லொஸ்லியாவின் மனம் கவர்ந்த அந்த தர்ஷி கிருபா யார்? என்பதை அறிய லொஸ்லியா ரசிகர்கள் தீவிரம் காட்டி வந்த நிலையில், ஊடகம் ஒன்றில் தர்ஷி, பேட்டி அளித்திருக்கிறார்.

 

Losliya and Tharshi Kiruba

 

அந்த பேட்டியில், ”லொஸ்லியாவுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவள் என் பெயரை கூறியதும் நான் கண் கலங்கிவிட்டேன். அவளுக்கும் எனக்கும் நிறைய சண்டைகள் வரும். அவள் அதிகம் கோபப்படுபவள் அல்ல. ஆனால், அங்கிருப்பவர்கள் இவரை ஏத்திவிட்டு சண்டை போட வைக்கிறார்கள். இதனால், அவள் கெட்ட பெண் போல சக போட்டியாளர்கள் மத்தியில் தெரிகிறாள். இதன் காரணமாகவே இந்த வாரம் நாமிடேன் ஆகிவிட்டாள். இருந்தாலும் நாங்கள் விட மாட்டோம், ஓட்டுகள் போட்டு லொஸ்லியாவை காப்பாற்றுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

லொஸ்லியாவின் தோழி தர்ஷி கிருபா, ரேடியோ ஒன்றில் ஆர்.ஜே-வாக பணியாற்றி வருகிறார்.