Feb 26, 2020 06:00 AM

’திரெளபதி’ படத்தை பார்க்க ஓகே சொன்ன திருமாவளவன்!

’திரெளபதி’ படத்தை பார்க்க ஓகே சொன்ன திருமாவளவன்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘திரெளபதி’ பட டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அனைத்து சர்ச்சைகளுக்கும் விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் மோகன், படத்தை பார்த்துவிட்டு எதையும் பேசுங்கள், என்று கூறினார்.

 

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வட மாவட்ட மக்களின் வாழ்க்கையை பற்றி பேசும் படமாகவும், அம்மாவட்டத்தில் உள்ள அப்பா - மகள் உறவு பற்றி பேசும் படமாகவும் உருவாகியிருக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் காண வரப் போகிறது திரௌபதி.

 

ஆனாலும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சாதி மோதல்கள் ஏற்படும் என பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

 

இப்படி சலசலைப்பைக் கிளப்பினாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் திரௌபதி திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல இடங்களில் திருமணம், காதணி போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் திரௌபதி படத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர்.

 

Draupadi

 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து சுவர் எழுத்து, பெயிண்டிங் போன்ற விளம்பரங்களையும் திரௌபதி படத்திற்காக செய்துள்ளனர்.

 

வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகப் போறப் படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் & வி.சி. தலைவர் திருமா இருவரும் பார்க்க ஒப்புக் கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.