Oct 19, 2021 06:12 AM

’பிரம்மாண்ட நாயகன்’ படத்தை பாராட்டிய திருப்பதி தேவஸ்தானம்!

’பிரம்மாண்ட நாயகன்’ படத்தை பாராட்டிய திருப்பதி தேவஸ்தானம்!

ஞானம் பாலசுப்ரமணியம் (பாம்பே ஞானம்) இயக்கத்தில் உருவாகியுள்ள வெங்கடசாலபதி வாழ்க்க வரலாற்று திரைப்படம் ‘பிரம்மாட்ன நாயகன்’. இதில் வெங்கடாசலபதியாக ஆரியன் ஷயாம் நடிக்கிறார். அவர் சீனிவாசன், வேதவன், திருப்பதி பாலாஜி மற்றும் மகாவிஷ்ணு ஆகிய வேடங்களில் நடிக்கிறார். அதிதி மகாலட்சுமியாகவும், சந்தியா ஸ்ரீயாக பத்மாவதி தேவியாகவும் நடிக்கிறார்.

 

இப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே பலரது பாராட்டை பெற்று வந்ததோடு, நாயகன் ஆரியன் ஷாம், விஷ்ணு கதாப்பாத்திற்கு கனகச்சிதமாக பொருந்துவதாகவும் பாராட்டி வந்தார்கள்.

 

இந்த நிலையில், ‘பிரம்மாண்ட நாயகன்’ படத்தின் சில காட்சிகளை பார்த்த திருப்பதி தேவஸ்தான குழுவினர் படத்தை வெகுவாக பாராட்டியிருப்பதோடு, நாயகன் ஆரியன் ஷாயமை தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார்கள்.

 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான துஸ்மாந்த குமார்தாஸ், திரைப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்த பிறகு, திருப்பதி வெங்கடாசலபதி கடவுளாக நடித்த இளம் நடிகர் ஆரியன் ஷயாமை தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்தினார். மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பாக ஒரு கடித்தத்தையும் நடிகருக்கு அனுப்பினார். அதில், இளம் நடிகர் ஆரியன் ஷ்யாம் மற்றும் இயக்குநர் ஞானம் பாலசுப்ரமணியம் (பாம்பே ஞானம்) மற்றும் ‘பிரம்மாண்ட நாயகன்’ திரைப்படத்தின் முழு குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

 

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான துஸ்மந்த குமார்தாஸ், ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரனின் மருமகன் ஆவார்.

 

Aryan Shyam and Bombay Gnanam

 

நடிகர் ஆரியன் ஷாயமுக்கு திருப்பதி வெங்கடாசலபதி வேடத்தை ஏற்று நடிக்கும் உத்வேகம் முக்கியமாக, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஸ்ரீ ராகவேந்திரா’ படத்தில் ரஜினிகாந்த அவர்களைப் பார்த்த பிறகு வந்துள்ளது. அவர் ஏற்ற வெங்கடாசலபதி கதாப்பாத்திரத்தில் தற்போது குவிந்து வரும் பாராட்டுக்களால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

 

ஞானம் பாலசுப்ரமணியம் (பாம்பே ஞானம்) இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆனந்த் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். திவாகர் சுப்ரமணியம் இசையமைக்க, கிரியேட்டிவ் தலைவராக மோகன் பாபு பணியாற்றியுள்ளார்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.