கார்த்தியின் அதிரடி நடவடிக்கையால் சீரமைக்கப்படும் திருவண்ணாமலை ஏரி!

நடிகர் கார்த்தியின் அதிரடி நடவடிக்கையால் திருவண்ணாமலையின் முக்கிய் நீர் ஆதரமான எடப்பாளையம் விண்ணமலை ஏரி சீரமைக்கப்படுகிறது.
103 ஏக்கர் பரப்பளவு கொண்ட எடப்பாளையம் விண்ணமலை ஏரி மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது. அதுமட்டும் அல்லாமல் 6 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த் ஏரி விளங்குகிறது. ஆனால், பல வருடங்களாக தூர்வாராமலும், சாக்கடை நீர் கலந்தும், குப்பைகளை ஏரியில் கொட்டியும் அசுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்த ஏரியை சீரமைக்கும் பணியை நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் மேற்கொள்ள, இவர்களுடன் எழுத்தாளர் பவா செல்லத்துரையின் வம்சி புக்ஸ் மற்றும் நீர்துளிகள் இயக்கம் ஆகிய அமைப்புகளும் இணைந்து ஏரியை சீரமைத்து தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளது.
நேற்று காலை தொடங்கிய ஏரி சீரமைப்பு பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்.