பிக் பாஸில் இயக்குநர் சேரன் கலந்துக்கொள்ள இந்த நடிகர் தான் காரணம்!

பிக் பாஸ் மூலம் மக்களிடம் ரீச் ஆகலாம் என்பதற்காக சில பிரபலங்கள் அதில் கலந்துக் கொள்கிறார்கள். ஆனால், மக்களிடம் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் சிலரும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிப் பெற்ற சேரன் பிக் பாஸியில் கலந்துக்கொள்ள நடிகர் ஒருவர் தான் காரணமாம்.
மொட்ட கடுதாசி டாஸ்க்கில் போட்டியாளர்கள் தாங்கள் விரும்பும் கேள்விகளை மற்ற போட்டியாளர்களிடம் கடிதம் மூலம் கேட்டனர். அதன்படி, சரவணன் இயக்குநர் சேரனிடம், ”நீங்கள் திரையுலகில் சாதித்துவிட்டீர்கள். புகழ், விருதுகளை எல்லாம் வாங்கிவிட்டீர்கள். அதன்பின் ஏன் நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீர்கள்?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த சேரன், “நான் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்கு முக்கிய காரணமே நடிகர் விஜய் சேதுபதி தான். ஏனெனில் நான் இயக்குநராக வெற்றியை சந்தித்த படம் என்றால் அது ஆட்டோகிராப் தான். அதன் பின் நான் எந்த ஒரு வெற்றியையும் அந்த அளவுக்கு தக்க வைக்கவில்லை.
இதனால் நான் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறேன். அப்போது தான் இது போன்ற வாய்ப்பு வந்தது, இது குறித்து விஜய் சேதுபதியிடம் கேட்ட போது, சார் நீங்கள் போங்க, ஆட்டோகிராப் படத்திற்கு பின் உங்களுக்கு ஒரு பேம் வரவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் உங்களை மறந்திருப்பார்கள், அதனால் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் சென்றால், மக்களுக்கு உங்களை தெரியவரும், அதன் பின் உங்களுடைய அனுபவங்களை எல்லாம் அங்கே பகிருங்கள், இது மற்றவர்களுக்கு உதவும், என்றார். அவரது பேச்சைக் கேட்டு தான் பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டேன்.” என்றார்.