Mar 07, 2019 06:35 AM

’சிறுத்தை’ சிவாவின் அடுத்த ஹீரோ இவர் தான்!

’சிறுத்தை’ சிவாவின் அடுத்த ஹீரோ இவர் தான்!

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிவா, அதன் பிறகு அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களை இயக்கினார். 

 

அஜித்தை வைத்து சிவா இயக்கிய வீரம் மற்றும் வேதாளம் ஓரவு வெற்றியடைந்தாலும், விவேகம் படுதோல்வியடைந்தது. இருப்பினும் அஜித் கொடுத்த மறுவாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவா, ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். வசூல் ரீதியாக விஸ்வாசம் பல சாதனைகளை புரிந்ததோடு, அஜித் படங்களிலேயே அதிகமான வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றது.

 

இந்த நிலையில், சிவா அடுத்ததாக எந்த நடிகரை இயக்குவார்? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

 

சிவா அடுடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஏற்கனவே வெளியானாலும், தற்போது இது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடீயோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறதாம்.