May 18, 2019 02:05 PM

’பிக் பாஸ் 3’ வீட்டில் நுழையும் முதல் பிரபலம் இவர் தான்! - லீக்கான உறுதியான தகவல்

’பிக் பாஸ் 3’ வீட்டில் நுழையும் முதல் பிரபலம் இவர் தான்! - லீக்கான உறுதியான தகவல்

மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், போட்டியாளர்கள் தேர்வில் நிகழ்ச்சி குழு ஈடுபட்டுள்ளது.

 

போட்டியாளர்களாக பங்கேற்கப் போகிறவர்கள் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றாலும், இந்த பட்டியலில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பங்கேற்பது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல்படி பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்துகொள்ளும் ஒரு போட்டியாளர் பெயர் உறுதியாகியுள்ளதாகவும், அவர் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் முதல் பிரபலமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் அசத்தி வரும் ஜாங்கிரி மதுமிதா தான் அந்த முதல் போட்டியாளர்.

 

Actress Madhumitha