Oct 12, 2019 04:24 AM

’தலைவர் 168’! - ரஜினிக்கு ஜோடி இவரா?

’தலைவர் 168’! - ரஜினிக்கு ஜோடி இவரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது ரஜினியின் அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. ரஜினியின் 168 வது படமாக உருவாகும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைக்கின்றனர்.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சிவா இயக்குகிறார். ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கியிருக்கும் சிவா, விஸ்வாசம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

 

Director Siva

 

ரஜினியின் 168 வது படத்தை இயக்கும் இயக்குநர்கள் குறித்து பல ஆலோசிக்கப்பட்ட நிலையில், இறுதியாக முருகதாஸும், சிவாவும் தேர்வு செய்யப்பட்டு அதில் சிவா வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதே சமயம், டி.இமான் இசையமைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் சிவா தரப்பு கீர்த்தி சுரேஷுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ஹீரோயின் சப்ஜக்ட் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

 

Actress Keerthy Suresh

 

கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவுடன் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருக்கும் நிலையில், அவரது மகளுடனு ஜோடியாக நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தாலும், இதெல்லாம் சினிமாவில் சகஜமப்பா...என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.