Oct 21, 2020 01:31 PM

’பிக் பாஸ் 4’-ல் இந்த வாரம் வெளியேற போவது இவர் தானாம்! - காரணம் இது தான்

’பிக் பாஸ் 4’-ல் இந்த வாரம் வெளியேற போவது இவர் தானாம்! - காரணம் இது தான்

பிக் பாஸ் சீசன் 4 கடந்த மூன்று வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் போட்டியாளர்களிடம் சில சண்டைகள் ஏற்பட்டாலும், அது எந்தவித பெரிய ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. தற்போது அரச குலம், அரக்கர் குலம் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், போட்டியாளர்கள் மாயபுரி, சொர்க்கபுரி என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

 

தற்போது அரச குலம் மற்றும் அரக்கர் குலம் இடையே நடைபெறும் சில்மிஷங்களால், சில போட்டியாளர்கள் கோபமடைந்து மோதிக்கொள்ளும் காட்சிகளும் புரோமோக்களில் அரங்கேறி வருகிறது. அதனால், இந்த டாஸ்க் மூலம் போட்டியாளர்களூக்கு இடையில் பெரிய மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் ஒருவர் வெளியேற இருப்பதாகவும், அது ஆஜித் தான் என்றும் தகவல் ஒன்று கூறுகிறது. காரணம், ஆரி, ஆஜித், அனிதா, சுரேஷ், பாலாஜி ஆகியோர் இந்த வாரத்திற்கான வெளியேற்று போட்டியில் இருந்தாலும், செய்தி தளம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில் ஆஜித்துக்கு தான் மிகக்குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாம்.

 

Aajith in Big Boss