Mar 15, 2020 07:03 AM

தர்ஷன், சனம் காதல் முறிவுக்கு இது தான் காரணம்! - மவுனம் கலைத்த ஷெரின்

தர்ஷன், சனம் காதல் முறிவுக்கு இது தான் காரணம்! - மவுனம் கலைத்த ஷெரின்

பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான தர்ஷன், சனம் ஷெட்டி காதல் மற்றும் காதல் முறிவு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும், சனம் ஷெட்டி தர்ஷன் மீது போலீசில் புகார் அளித்ததால், தர்ஷனின் சினிமா வாழ்க்கை சற்று பாதிப்படையவும் செய்தது. பிறகு தர்ஷன் கொடுத்த விளக்கத்தினால், அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம், சனம் ஷெட்டியின் புகார் மற்றும் அதற்கான வழக்கு, தர்ஷனுக்கு பெரிய தலைவலியாக அமைந்திருக்கிறது.

 

இந்த நிலையில், தர்ஷன், சனம் ஷெட்டி காதல் முறிவுக்கு காரணமானவராக கூறப்படும் ஷெரின், முதல் முறையாக தர்ஷன் காதல் முறிவு குறித்து பேசியிருக்கிறார். பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்ட ஷெரின், தர்ஷனை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது காதல் அல்ல, வெறும் நட்பு தான் என்று அவர் பிக் பாஸ் வீட்டிலேயே தெரிவித்தார். இருந்தாலும், தர்ஷனும், ஷெரினும் காதலிப்பதாக வனிதா கூறினார்.

 

நிகழ்ச்சி முடிந்த பிறகு தர்ஷனும், ஷெரினும் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட நிலையில், தர்ஷன் சனம் ஷெட்டியுடனான காதலை முறித்துக் கொண்டார். இதற்கு காரணம் ஷெரின் தான் என்று கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஷெரின் எதுவும் பேசவில்லை.

 

இந்த நிலையில், முதல் முறையாக தர்ஷனின் காதல் முறிவு குறித்து பேசியிருக்கும் ஷெரின், என்னை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள், அதற்கான உரிமையை உங்களுக்கு கொடுக்கிறேன், ஆனால் என் குடும்பத்தை விமர்சனம் செய்யாதீர்கள். காதலில் இருவர் பிரிவதற்கு மேலான பல காரணங்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் என்னைஒ தொடர்புபடுத்தி பேசியதால் தான் இப்போது பேசுகிறேன், இனி இது தொடர்பாக பேச மாட்டேன், என்று கூறியிருக்கிறார்.

 

இது தொடர்பாக ஷெரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெரிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதோ அந்த விளக்கம்,

 

 

View this post on Instagram

🙏🏻

A post shared by Sherin Shringar (@sherinshringar) on Mar 12, 2020 at 1:25am PDT