Jan 25, 2019 10:05 AM

’விஸ்வாசம்’ வெற்றியடைய இது தான் காரணம்! - இயக்குநர் சொன்ன உண்மை

’விஸ்வாசம்’ வெற்றியடைய இது தான் காரணம்! - இயக்குநர் சொன்ன உண்மை

தமிழ் சினிமாவுக்கு 2019 ஆம் ஆண்டு துவக்கமே வெற்றியாக அமைந்திருக்கிறது. அதற்கு காரணம், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பெற்ற வெற்றி தான். அதிலும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது.

 

ஓபனிங் கிங் என்று சொல்லக்கூடிய அஜித்தின் எந்த படங்களும் செய்யாத வசூல் சாதனையை ‘விஸ்வாசம்’ செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் இந்த விஸ்வரூப வெற்றிக்கு காரணம் என்ன? என்பதை இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார்.

 

இன்று நடைபெற்ற ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், ”கடந்த 20 வருடங்களாக தியேட்டருக்கு குடும்பமாக வருவதும், பெண்கள் வருவதும் குறைந்துவிட்டதகாவும், அதனால் 18 வயது இளைஞர்களுக்காக மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும், என்று கூறிக்கொண்டு இருந்ததோடு, தங்களது கையில் இருக்கும் அழுக்குகளை ரசிகர்கள் முதுகில் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், எப்போது குடும்பமாக படம் பார்க்க வருகிறார்களோ, அப்போது தா திரைப்படங்கள் வெற்றி பெறும்.

 

Karu Pazhaniyappan

 

அது எந்த காலக்கட்டத்திலும் மாறாது என்பது பல படங்கள் நிரூபித்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற அஜித்தின் ‘விஸ்வாசம்’ வரை.” என்று தெரிவித்தார்.