Jul 30, 2019 11:03 AM

’தர்பார்’ படத்திற்குப் பிறகு ரஜினியை இயக்கும் இயக்குநர் இவர் தான்!

’தர்பார்’ படத்திற்குப் பிறகு ரஜினியை இயக்கும் இயக்குநர் இவர் தான்!

கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தனது கட்சி மற்றும் சின்னம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறார். அதே சமயம், தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.

 

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு, தமிழகத்தில் எந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதை எதிர்கொள்வேன், என்று ரஜினிகாந்த் அறிவித்ததால், ‘தர்பார்’ தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

ஆனால், தொடர்ந்து சில இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடமும் தனது கதை ஒன்று கூறி, அதற்கு திரைக்கதை அமைக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில், ‘தர்பார்’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் இன்னொரு படம் நடிக்கும் சூழலே தற்போது உருவாகியுள்ளது.

 

இந்த நிலையில், சிறுத்த சிவா ரஜினிகாக உருவாக்கிய கதை ஒன்றை சன் பிக்சர்ஸிடம் கூறியிருக்கிறார். கதை பிடித்துப்போக கலாநிதி மாறனே, நேரடியாக ரஜினியை தொடர்பு கொண்டு, சிறுத்தை சிவா கதையில் நடிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டாராம். இதையடுத்து நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த், அட்வாஸாக ஒரு தொகையையும் வாங்கிவிட்டாராம்.

 

Siruthai Siva

 

6 மாதங்களில் முடிய உள்ள இந்த படத்திற்குப் பிறகாவது ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் நுழைவாரா இல்லையா, என்று பொருத்திருந்து பார்ப்போம்.