Jun 27, 2019 07:04 AM

விஜய் இளமையாக இருக்க இதுதான் காரணம்! - பிரபலம் வெளியிட்ட தகவல்

விஜய் இளமையாக இருக்க இதுதான் காரணம்! - பிரபலம் வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜயின் 63 வது படமான ‘பிகில்’ விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது. நடனம், சண்டைக்காட்சி, நடிப்பு, நகைச்சுவை என்று அனைத்திலும் இளைஞர்களை கவரக்கூடிய விஜய் குழந்தைகளையு வெகுவாக கவர்ந்துவிடுவார்.

 

சமீபத்தில் 45 வது வயதில் அடியெடுத்து வைத்த விஜய், தற்போது கல்லூரி மாணவரைப் போல ரொம்பவே இளைமையாக இருக்கிறார். அவரிடம் வியந்து பார்க்க கூடியதில் இந்த இளமை ரகசியமும் ஒன்று. எப்படி உடலை இப்படி பராமரிக்கிறார் என்று பல பிரபலங்கள் விஜயை பார்த்து வியந்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், விஜயின் இளமை ரகசியம் குறித்தும், அவர் எதனால் இப்படி இளமையாக இருக்கிறார், என்பது பற்றியும் பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

 

பிரபலங்களின் பிட்னெஸ் டிரைனரான சிவகுமார் என்பவர் பேட்டி ஒன்றில், விஜய் இரவு என்ன நேரம் ஆனாலும், ஒரு மணி நேரம் கார்டியோ செய்துவிட்டு, ப்ரூட் சாலட் சாப்பிட்டுவிட்டு தான் தூங்குவாராம். அதனால் தான் இப்போதும் அவர் இளமையாக இருப்பதாக, தெரிவித்துள்ளார்.