Feb 06, 2019 05:23 PM

ரஜினி மகளின் இரண்டாவது திருமணத்திற்கு இவர் தான் காரணம்!

ரஜினி மகளின் இரண்டாவது திருமணத்திற்கு இவர் தான் காரணம்!

ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவுக்கு வரும் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற செளந்தர்யாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும்.

 

மகளின் திருமணத்திற்காக ரஜினிகாந்த் முக்கிய சினிமா பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

 

இந்த நிலையில், செளந்தர்யாவின் இந்த இரண்டாவது திருமணத்திற்கு காரணம் யார்? என்பதை ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

 

அதாவது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு நேரில் சென்று பத்திரிக்கை வழங்கிய ரஜினிகாந்த், பிறகு அளித்த பேட்டியில், செளந்தர்யா நிச்சயதார்த்தம் திருநாவுக்கரசர் மூலமாக தான் நடந்தது. அதனால் தான் முதல் பத்திரிக்கையை அவருக்கு வழங்கினேன், என்று தெரிவித்திருக்கிறார்.

 

Rajinikanth and Thirunavukarasar