Dec 28, 2019 03:49 PM

இந்த வருடத்தின் சென்னை கிங் யார்? - இதோ பட்டியல்

இந்த வருடத்தின் சென்னை கிங் யார்? - இதோ பட்டியல்

2019 நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு துறைகளில் நடைபெற்ற வெற்றிகள் மற்றும் வீழ்ச்சிகள் குறித்து பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில், சினிமாத்துறையை சார்ந்த பல்வேறு பட்டியல்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்கள் மற்றும் ஹீரோக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

 

தமிழ்த் திரைப்படங்களின் வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதிகளில் சென்னையும் ஒன்று. அதன்படி, இந்த வருடம் சென்னையில் அதிகம் வசூலித்த டாப் 5 படங்களின் பட்டியல் இதோ,

 

பேட்ட- ரூ. 15.68 கோடி

பிகில்- ரூ. 14.01 கோடி

விஸ்வாசம்- ரூ. 13.27 கோடி

நேர்கொண்ட பார்வை- ரூ. 10.85 கோடி

காஞ்சனா 3- ரூ. 7.63 கோடி

 

இந்த வருட ஆரம்பத்திலேயே தமிழ்த் திரையுலகிற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்த படங்கள் வெளியானதை தொடர்ந்து, தொடர்ந்து பல நல்லப் படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது.

 

அதே சமயம், இந்த வருடத்தின் இறுதி வாரமான கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் சில படங்கள் சிறப்பாக இருந்தாலும், வியாபார ரீதியாக அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும், தமிழ் சினிமாவை பொருத்தவரை 2019 ஆம் ஆண்டு சிறப்பாகவே இருந்ததாகவும் கூறப்படுகிறது.