உலகப் புகழ் பெற்ற ‘தோர்’ பட நடிகர் தற்கொலை! - அதிர்ச்சியில் ஹாலிவுட்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் ‘தோர்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் எக்கச்சக்கம். அதனால் தான் இப்படங்கள் உலக அளவில் மாபெரும் வரவேற்பு பெறுகிறது.
கடந்த மாதம் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழகத்தில் நான்காவது வாரமாக வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் அப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
இந்த நிலையில், ‘தோர்’ படத்தில் நடித்த ஐசக் கப்பி (Isaac Kappy) என்ற குணச்சித்திர நடிகர் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் ஹாலிவுட் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
’டெர்மினட்டேர் சால்வேஷன்’ (Terminator Salvation) உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் 42 வயதாகும் ஐசக் கப்பி, அரிசானா பகுதியில் உள்ள பிரிட்ஜ் மேல் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.