Sep 05, 2019 05:43 AM

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான மூன்று ஹீரோயின்கள்!

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான மூன்று ஹீரோயின்கள்!

’ராட்சசன்’ படத்தை தொடர்ந்து ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால், தற்போது ‘எஃப் ஐ ஆர்’ என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தை சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார். இப்படத்தை இயக்கும் மனு ஆனந்த், இயக்குநர் கெளதம் மேனனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. 

 

FIR

 

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞர், தெளிவாக அறுதியிட்டு கூறமுடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை அதிரடி திகில் படமாக சொல்லப் போகிறார்களாம்.

 

இப்படத்தின் முக்கிய வேடங்களில் அமான், பிரவீன் குமார், மாலா பார்வதி, RNR மனோகர், ஷப்பீர், கெளரவ் நாராயணன், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ராகேஷ் பிரம்மானந்தன், பிரவீன் K நாயர், பிரஷாந்த் (itisprashanth), வினோத் கைலாஷ், R ஷ்யாம் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான முக்கியத்துவம் பெறுவதால், ஒவ்வொரு நடிகரும் இதுவரை தாங்கள் நடித்திராத வித்தியாசமான, புதிய கேரக்டர்களில் வலம் வந்து மக்கள் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். 

 

‘கிருமி’ புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அஷ்வத் இசையமைக்கிறார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பொறுப்புகளை ஏற்க, இந்துலால் கவீத் கலை இயக்கத்தை கவனித்து கொள்கிறார். ஆடை வடிவமைப்பு பணியை பூர்த்தி பிரவீன் கவனிக்க, ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்கிறார்.