Feb 26, 2020 06:11 AM
ரஜினிகாந்த் வீட்டில் இன்று விஷேஷம்!

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், விரைவில் அரசியலில் இறங்க இருக்கிறார். அவரது கட்சி அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், தமிழக சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடுவேன், என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
‘தர்பார்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் வீட்டில் இன்று விஷேஷம். ஆம், ரஜினிகாந்தின் 39 வது வருட திருமண நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், ரஜினிகாந்தின் வீடு விழாக்கோலமாக மாறியுள்ளது.
தற்போது ரஜினிகாந்த் - லதா தம்பதிக்கு பிரபலங்கள் திருமண நாள் வாழ்த்து கூறி வருவதோடு, அவரது குடும்பத்தாரும் ரஜினிகாந்த் வீட்டில் ஒட்டு மொத்தமாக கூடியிருக்கிறார்களாம்.