Jul 16, 2018 05:54 PM

சதா நடிப்பில் உருவாகியுள்ள ‘டார்ச் லைட்’! - சென்சார் சான்றிதழுக்காக போராடிய இயக்குநர்

சதா நடிப்பில் உருவாகியுள்ள ‘டார்ச் லைட்’! - சென்சார் சான்றிதழுக்காக போராடிய இயக்குநர்

நெடுஞ்சாலைகளில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘டார்ச் லைட்’.சதா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தை விஜயின் ‘தமிழன்’ படத்தை இயக்கியிஅ மஜீத் இயக்கியிருக்கிறார்.

 

விரைவில் வெளியாக உள்ள இப்படத்திற்காக சென்சார் சான்றிதழ் பெற இயக்குநர் மஜீத் பெரிய போராட்டத்தையே நடத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இது ஒரு பீரியட் பிலிம். 90 களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள். ஆனால், நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்க சம்மதித்தார்.

 

Torch Light

 

வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்த சமூகம் எப்படிப் படுகுழில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து படமாக்கினேன். மும்பையில் சென்சார் ஆபிஸர்கள் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன், படம் சிறப்பாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். படத்தில் சதா, ரித்விகா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

சென்சார் சென்ற போது இங்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். இங்குப் போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல், பிறகு நான் மும்பை சென்று ஏ சான்றிதழ் பெற்றுள்ளேன்.” என்றார்.

 

Torch Light

 

சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜேவி இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். மாரீஸ் எடிட்டிங்கை கவனிக்க, சேகர் கலையை நிர்மாணித்துள்ளார். சிவராகவ், ஷெரீப் நடனம் அமைக்க, அப்துல் மஜீத், எம்.அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.