வெளிநாட்டு போலீசாரால் திரிஷா கைது! - பரபரப்பாக்கிய புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கினாலும், வெற்றிக்காக ரொம்பவே போராடி வருகிறார்.
ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிகளை கொடுத்திருக்கும் திரிஷா, சமீபத்தில் கூட விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ‘96’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து இதுவரை அவர் ஒரு வெற்றியை கூட கொடுத்ததில்லை. அவர் நடித்த ‘நாயகி’, ‘மோகினி’ போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
இருந்தாலும், ‘கர்ஜனை’ என்ற ஹீரோயின் சப்ஜக்ட்டில் நடித்திருக்கும் திரிஷா, ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத, ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கும் ‘ராங்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், வெளிநாட்டு போலீசாரால் திரிஷா கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம் ‘ராங்கி’ படத்தின் பஸ்ட் லுக்காக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வெளியான இந்த பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, நிச்சயம் இப்படத்தின் மூலம் ஹீரோயின் சப்ஜக்ட்டில் தனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை திரிஷா மற்றும் அவரது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த பஸ் லுக்,