Mar 20, 2020 05:52 AM

’மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

’மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தனது முதல் படத்திலேயே வெற்றி பெற்றதோடு, அப்படத்தின் மூலம் ரசிகர்களை மட்டும் இன்றி தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களையும் கவர்ந்தார். தனது நேர்த்தியான திரைக்கதை யுக்தியினால் கோடம்பாக்கத்தின் பார்வையை தன் மீது பட வைத்தார்.

 

தனது இரண்டாவது படமாக கார்த்தியை ஹீரோவாக வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கினார். ஹீரோயின் இல்லை, பாடல்கள் இல்லை, படம் முழுவதும் ஒரு இரவில் நடப்பதுபோன்ற கதை, என பல வித்தியாசமான மற்றும் புதிய முயற்சியோடு கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

 

கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் ரூ.100 கோடி வசூல் ஈட்டிய முதல் படமாக ‘கைதி’ அமைந்தது. விஜயின் ‘பிகில்’ படத்துடன் ரிலீஸாக சில திரையரங்குகளில் விஜய் படத்தையே பின்னுக்கு தள்ளி வசூல் சாதனைப் படைத்த அப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் மீது பல முன்னணி நடிகர்களின் பார்வை பட்டது.

 

அப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்னதும், லோகேஷின் தரம் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அதன்படி, விஜயை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துவிட்டார். இப்படம் படப்பிடிப்பில் இருந்த போதே, வியாபாரமும் முடிந்தது பெரிய சாதனையாகும். மேலும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும் இப்படம் ஏற்படுத்தியிருப்பதால், நிச்சயம் ரூ.250 கோடியை வசூலிக்கும் என்று சில விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்திற்காக ரூ.3 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், படம் மிகப்பெரிய வசூலை ஈட்டினால், அவரது சம்பள தொகை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.