இளையராஜாவின் பாடல்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம்! - எவ்வளவு தெரியுமா?

இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்களை பொது மேடைகளில் பாடுவதற்கும், திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும், என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்தனர்.
மேலும், தனது பாடல்களுக்கான காப்புரிமை தொகையை, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு இளையராஜா வழங்கியுள்ளார்.
அதன்படி, இனி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த வேண்டுமானால், இசைக் கலைஞர்கள் சங்கத்தில் கட்டணம் செலுத்திவிட்டு தான் பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா, “இளையராஜா பாடலுக்கு அனுமதி பெறவும், அதற்கான கட்டணங்களை அறியவும், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தை அணுகலாம். இதற்கு முன், முதல் நிலையில் உள்ளவர்களுக்கு, இளையராஜா பாடலை பாட, உலக அளவில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கட்டணமாக இருந்தது. அது மிகவும் அதிகம் என்று பலர் கூறியதால், கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் குறித்து அறிய விரும்புகிறவர்கள் சங்கத்தை அணுகினால், உரிய விளக்கம் அளிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.