Aug 22, 2019 04:52 PM

கவினுடன் காதலா? - லொஸ்லியாவிடம் நேரடியாக கேட்ட சேரன்

கவினுடன் காதலா? - லொஸ்லியாவிடம் நேரடியாக கேட்ட சேரன்

பிக் பாஸ் 3 வது சீசன் 60 நாட்களை கடந்துவிட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக எதிர்ப்பார்க்காத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சையான விஷயங்களால் பிக் பாஸின் ஆரம்பக்கட்ட பரபரப்பான கவின் - லொஸ்லியா காதல் காணாமல் போய்விட்டது.

 

இருப்பினும், தற்போது பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு பரபரப்பான விஷயமும் நடைபெறாத சூழல் இருப்பதால், மீண்டும் கவின் - லொஸ்லியா காதலை பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினர் தட்டி எழுப்ப பார்க்கிறார்கள். எனவே, இன்று முதல் கவின் - லொஸ்லியா காதல் விவகாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், லொஸ்லியாவிடம் அப்பா உறவு கொண்டாடும் சேரன், அவரிடம் நேரடியாக கவினை காதலிக்கிறாயா, என்று கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் லொஸ்லியா, கவினை எனக்கு ரொம்ப பிடிக்கும், எனக்காக அவன் நிற்கிறான், அவனுக்காக நான் நிற்கிறேன். மற்றபடி எங்களது ரிலஷன்ஷிப் அடுத்த லெவல் போவதெல்லாம் வெளியே போய் தாய், என்று தெரிவிக்கிறார்.

 

லொஸ்லியாவின் இந்த பதிலுக்கு கவின் நிச்சயம் கருத்து சொல்வார் என்று தெரிகிறது. அப்படி அவர் சொல்லப் போகும் கருத்தில் தான் இவர்களது காதல் சூடு பிடிக்குமா அல்லது, புஸ்ஸாகுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.