’நேர்கொண்ட பார்வை’ படத்தை கைப்பற்றிய உதயநிதி!

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், திமுக-வின் இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு முழு அரசியல்வாதியாகிவிட்டார். இதன் பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையில், அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் சில படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ரீமேக் படமான ‘நேர்கொண்ட பார்வை’ வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரத்தில் தொடர்ந்து இழுபறிகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது வியாபாரம் அனைத்தும் முடிவடைந்துவிட்டது.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், சென்னை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிடுகிறது.