Oct 26, 2019 05:58 AM

இளம் நடிகருடன் கமிட்டான வாணி போஜன்! - வைரலாகும் புகைப்படம் இதோ

இளம் நடிகருடன் கமிட்டான வாணி போஜன்! - வைரலாகும் புகைப்படம் இதோ

சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன், தற்போது வெள்ளித்திரையில் களம் இறங்கிவிட்டார். தமிழில் நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியவர், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரித்த படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

 

மேலும், தமிழில் ‘ஓ மை கடவுளே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடிக்க, வாணி போஜன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

 

இந்த நிலையில், வாணி போஜன் அசோக் செல்வனுடன் கமிட்டாகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. அதற்கு ஏற்றவாறு அசோக் செல்வனும், வாணி போஜனுட்ன நெருக்கமாக செல்பி ஒன்றை எடுத்து தனது சமூக வலைதளத்தில் போட்டதோடு, அதில் வாணி போஜனை, ”செம அழகு” என்றும் வர்ணித்துள்ளார்.

 

Ashok Selvan and Vani Bhojan

 

இந்த புகைப்படம் வைரலாகி வருவதை தொடர்ந்து, அசோக் செல்வன், வாணி போஜன் காதலித்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரங்களில் அசோக் செல்வம் மற்றொரு பதிவிட்டதால், காதல் செய்தி வெறும் கிசுகிசு என்று தெரிந்துவிட்டது.

 

அதாவது, ‘ஓ மை கடவுளே’ படத்தின் விளம்பரத்திற்காக தான் இப்படி ஒரு புகைப்படத்தையும், பதிவையும் வெளியிட்டதாக அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.