Aug 06, 2018 11:41 AM

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் வாணி போஜன்!

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் வாணி போஜன்!

தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் நடிப்பதற்கு முன்பு வாணி போஜன் விளம்பரப் படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார்.

 

சிரீயல் மூலம் பிரபலமான அவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், ஹீரோயினாக அல்லாமல் குணச்சித்திர வேடத்தில் தான் அதிகமானோர் அவரை நடிக்க வைக்க விரும்பினார்கள். இதனால் சினிமா வாய்ப்பை நிராகரித்தவர் ஹீரோயினாக வாய்ப்பு வந்தால், நல்ல கதையாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்தார்.

 

இந்த நிலையில், ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் வாணி போஜன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘காசிமேடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை லோகேஷ் இயக்குகிறார்.

 

Kalaiarasan

 

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க பல முன்னணி ஹீரோக்களை இயக்குநர் லோகேஷ் அனுகிய போது அவர்கள் கதையை மற்றி, ஹீரோ கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்க செய்ய சொன்னார்களாம். ஆனால், கலையரசனோ கதையை படித்துவிட்டு எந்த மாற்றமும் சொல்லாமல் நடிக்க சம்மதித்தாராம்.

 

வாணி போஜன் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.