ஹோம்லியை ஓரம் கட்டிய வாணி போஜன்! - சினிமாவுக்காக எடுத்த கவர்ச்சி அவதாரம் இதோ

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘தெய்வமகள்’ தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் வாணி போஜன். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக காத்திருந்த வாணி போஜன், ‘தெய்வமகள்’ சீரியல் முழுவதையும் முடித்துக் கொடுத்தப் பிறகே சினிமாவில் நடிப்பது குறித்து யோசிப்பேன், என்று கூறி வந்த சினிமா வாய்ப்புகளை வழி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.
தற்போது தான் நடித்த சீரியல்கள் அனைத்தும் முடிந்த நிலையில், புது சீரியல்கள் எதிலும் நடிக்காமல் இருக்கும் வாணி போஜன், தனது முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பியுள்ளார்.
நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில், வைபவுக்கு ஜோடியாக நடித்து வரும் வாணி போஜன், மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
சீரியலில் உலகின் நயன்தாரா, என்று அழைக்கப்படும் வாணி போஜன், சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதற்காக கதை தேர்வில் கவனம் செலுத்துவதோடு, சினிமாவுக்காக தனது ஹோம்லியை ஓரம் கட்டவும் முடிவு செய்துள்ளார். அதற்காக அவ்வபோது தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர், சமீபத்தில் ஸ்டைலிஷான அதே சமயம் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த தொகுப்பில் இருந்து வெளியான ஒரு கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,