வரலட்சுமியை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்! - ராதிகாவின் பதிலடி

நடிகை வரலட்சுமி, திரைப்படங்களில் தைரியமான பெண்ணாக நடிப்பது மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் தைரியமானவராகவே இருக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும், நேரடியாகவும், தைரியமாகவும் பேசும் வரலட்சுமி, சமீபத்திய பேட்டி ஒன்றில், பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரும், இயக்குநரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அவர்கள் தன்னிடம் பேசிய போன் கால் ஆதாரம் இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வரலட்சுமியின் பேச்சை வரவேற்றிருக்கும் அவரது சித்தியான நடிகை ராதிகா, "Well said Varu, more strength to you" தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
அதே சமயம், ராதிகா தனது தாய் இல்லை, அவர் தனது தந்தையின் மனைவி மட்டுமே, அதனால் அவரை ஆண்டி என்று தான், தான் அழைப்பேன், என்று சமீபத்தி வரலட்சுமி கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பாக ராதிகா எந்தவித பதில் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.