விஷாலால் வாய்ப்பை இழந்த வரலட்சுமி!

’ஆக்ஷன்’ படத்தை தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படத்தில் விஷால் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கும் இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டன் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட ‘துப்பறிவாளன் 2’ சென்னை திரும்பியுள்ளார்கள். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை தொடங்க உள்ளார்கள்.
இதற்கிடையே விஷாலின் மற்றொரு படமான ‘சக்ரா’ படத்தின் படப்பிடிப்பில் விஷால் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் ராணுவ வீரராக நடிக்கும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே, ஸ்ரத்த ஸ்ரீநாத், ரெஜினா கசண்ட்ரா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
இவர்கள் மூன்று பேரும் ஹீரோயின் என்றாலும் விஷாலுக்கு ஜோடியாக அல்லாமல் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்களாம். அதிலும் ரெஜினா கசண்ட்ராவின் கதாப்பாத்திரம் விஷாலுக்கு இணையான அதே சமயம் எதிர்மறை கதாப்பாத்திரமாம்.
பவர்புல்லான இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் வரலட்சுமியை தான் நடிக்க வைக்க இயக்குநர் முடிவு செய்தாராம். ஆனால், விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவை தொடர்ந்து தான், அந்த கதாப்பாத்திரத்தில் ரெஜினா கசண்ட்ராவை நடிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.