May 03, 2019 08:10 AM

பப்ளிக் ஸ்டாருடன் இணைந்த வரலட்சுமி சரத்குமார்

பப்ளிக் ஸ்டாருடன் இணைந்த வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், ஹீரோயினாக நடிப்பதோடு வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் அவ்வபோது உருவாகும் ஸ்டார்களில் ஒருவராக உள்ள பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் ஒரு படத்தில் வரலட்சுமி இணைந்திருக்கிறார்.

 

சந்தான மூர்த்தி என்பவர் இயக்கும் ’டேனி’ படத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதே படத்தில் தான் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இபப்டத்தில் பப்ளிக்ஸ் ஸ்டார் போலீஸ் அதிகாரி வேடத்தில் அண்டிக்கிறார்.

 

விமல் நடிப்பில், சற்குணம் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘களவாணி 2’ வில் மெயின் வில்லனாக நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், அப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராவார் என்று படக்குழுவினர் கூறி வரும் நிலையில், மேலும் சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

 

தற்போது, வரலட்சுமியும், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் இணைந்திருப்பதால் ‘டேனி’ படம் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.