’வட்டக்கானல்’ படத்தின் டிரைலர் வெளியானது!

கொடைக்கானலில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘வட்டக்கானல்’. இதில், துருவன் மனோ நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி, ஆர்.கே.வரதராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, துணை கதாபாத்திரங்களில் முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த், பாத்திமா பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
கொடைக்கானலின் வட்டக்கானல் பகுதியில் காணப்படும் மேஜிம் மஸ்ரூம் என்று சொல்லக்கூடிய போதை பொருளை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
“ஒரு முறை சாப்பிட்டா, ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா இருவரும் சேர்ந்து வாசிச்சா...எப்படியிருக்கும்!” என்ற வரிகளோடு ஆரம்பிக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
டாக்டர் ஏ.மதியழகன், வீரம்மாள் மற்றும் ஆர்.எம்.ராஜேஷ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் இம்மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பித்தாக் புகழேந்தி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, மாரிஸ் விஜய் இசையமைத்துள்ளார். சாபூ ஜோசப் படத்தொகுப்பு செய்ய, டான் பாலா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். டான் அசோக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க ஷெரிப் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளர்கள் பணியை சாவித்ரி மற்றும் டைமண்ட் பாபு கவனிக்கிறார்கள்.