Jul 17, 2018 02:17 PM

’கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பாராட்டிய துணை குடியரசு தலைவர்!

’கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பாராட்டிய துணை குடியரசு தலைவர்!

கார்த்தி நடிப்பில், சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. மக்களிடன் பேராதரவுடன் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பாராடியிருப்பது படக்குழுவினரை கூடுதல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

Vengaya Nayudu

 

தமிழில் வெளியான அதே நாளில், தெலுங்கில் ‘சின்னபாபு’ என்ற தலைப்பில் இப்படம் வெளியானது. தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பார்த்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ”சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான ’சின்னபாபு’ (தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்’) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.” என்று பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

வெங்கையா நாயுடுவின் இத்தகைய பாராட்டினால் மகிழ்ச்சியடைந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினர் அவருக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

 

Twitter Page