Jun 06, 2019 06:28 AM

யுவன் சங்கர் ராஜாவுடன் மீண்டும் கைகோர்த்த வெங்கட் பிரபு!

யுவன் சங்கர் ராஜாவுடன் மீண்டும் கைகோர்த்த வெங்கட் பிரபு!

‘சென்னை 600028’ படம் மூலம் இயக்குநரான வெங்கட் பிரபு, ஜாலியான எதார்த்தமான கதைக்களத்தை கையாண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, தனது ஒவ்வொரு படங்களின் பாடல்களையும் ஹிட் பாடல்களாகவே கொடுத்து வருகிறார். இதற்கு காரணம், யுவன் சங்கர் ராஜா.

 

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 600028’ முதல் ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ உள்ளிட்ட அனைத்து படங்களும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பதோடு, இந்த படங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

 

இதற்கிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 600028’ படத்தில் யுவன் சங்கர் ராஜா - வெங்கட் பிரபு கூட்டணி பிரிந்தது. இப்படத்தின் ஒரிஜல் டிராக்குகள் யுவன் சங்கர் ராஜாவுடையது என்றாலும், படத்திற்கு பின்னணி இசை பிரேம்ஜி அமைத்தார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியீட்டு தயாராக இருக்கும் ‘பார்ட்டி’ படத்திற்கு பிரேம்ஜி தான் இசையமைத்திருக்கிறார்.

 

இப்படி, வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா கூட்டணி பிரிந்ததில் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்த நிலையில், சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்க இருக்கும் ‘மாநாடு’ படத்திற்கு யார் இசையமைப்பாளர், என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், மீண்டும் யுவனுடன் வெங்கட் பிரபு இணைந்திருக்கிறார்.

 

இந்த தகவலை, ரமலான் பண்டிகையின் போது யுவன் சங்கர் ராஜவே வெளியிட்டதால் ரசிகர்கள் குஷியடைந்திருக்கிறார்கள்.