Aug 15, 2019 02:02 PM

சிம்புவின் ‘மகா மாநாடு’க்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு!

சிம்புவின் ‘மகா மாநாடு’க்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தில் இருந்து சிம்புவை நீக்கிவிட்டதாக கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து வர, பொருத்து பொருத்து பார்த்த தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து இந்த அதிரடி முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், சிம்பு மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் வெளிப்படையாக சுரேஷ் காமாட்சி சொல்லவில்லை.

 

இதற்கிடையே, சிம்புவின் அம்மா உஷா ராஜேந்திரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு பைனான்ஸ் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் தான் ‘மாநாடு’ படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், சிம்பு கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தாமல் காலம் தாழ்த்தியதாலேயே சிம்பு கோபமடைந்து வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகவும், கூறினார்.

 

இந்த நிலையில், சிம்பு ‘மகா மாநாடு’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்க போவதாக தகவல் வெளியானது. மேலும், இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், டி.ராஜேந்தர் ரூ.125 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்த தகவலை சிம்பு, தனது மக்கள் தொடர்பாளர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

சிம்புவின் இந்த திடீர் அறிவிப்பு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று வெங்கட் பிரபு ‘மாநாடு’ படம் குறித்த அப்டேட் ஒன்றை சூசகமாக வெளியிட்டுள்ளார். அதாவது, தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு அதில், “வம்பை தவிர்த்து அன்பை வளர்ப்போம்” என்றும் பதிவிட்டுள்ளார். வம்பு என்றால் சிம்பு, அன்பு என்றால் தனுஷாம். அதாவது, ‘வட சென்னை’ படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்தாரல்லவா, அதை குறிக்கிறதாம். ஆக, ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு பதில் தனுஷை ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு சூசகமாக தெரிவித்திருப்பதாக, கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.

 

Suresh Kamatchi

 

சிம்புவின் ‘மகா மாநாடு’ குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்டதற்கு, அவர் அப்படி ஒரு படத்தை அறிவித்திருக்கிறார், என்பதே எனக்கு தெரியாது, என்று கூறினார்.