Oct 17, 2019 05:50 AM

வெற்றிமாறனின் புதுப்பட அறிவிப்பு! - அப்செட்டில் காமெடி நடிகர்

வெற்றிமாறனின் புதுப்பட அறிவிப்பு! - அப்செட்டில் காமெடி நடிகர்

‘அசுரன்’ படம் மூலம் பல முன்னணி ஹீரோக்களின் பார்வையை தன் மீது பட வைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். விமர்சனம் ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்ற ‘அசுரன்’ ரூ.100 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி இன்னமும் பல திரையரங்கங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இதனால், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும், என்று பல முன்னணி ஹீரோக்கள் விரும்புவதோடு, இது தொடர்பாக அவருக்கு தூதும் விட்டிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், வெற்றி மாறன் இயக்கும் அடுத்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், படம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.

 

இதற்கிடையே, காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் படம் ஒன்றை இயக்கப் போவதாக கூறியிருந்தார். அந்த படம் தான் இது என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தின் ஹீரோ சூரி இல்லை என்பது தான் உண்மை.

 

Suri

 

சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்குவது உறுதி என்றாலும், அது இந்த படம் இல்லையாம். இந்த படத்தில் வேறு ஒரு ஹீரோ நடிக்க இருப்பதாகவும், அவர் முன்னணி ஹீரோவாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

‘அசுரன்’ முடிந்த பிறகு ‘வட சென்னை’ படத்தை ஆரம்பிக்க இருந்த வெற்றிமாறன், அதற்கு முன்பாக சூரியை ஹீரோவாக நடிக்கும் படத்தை தான் இயக்க இருந்தாராம். ஆனால், ‘அசுரன்’ படம் கொடுத்த வெற்றியும், அவரை தேடி வந்த தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்களின் எண்ணிக்கையையும் பார்த்ததோடு, பலரின் அறிவுரையாலும் தனது முடிவை மாற்றிக்கொண்டவர், முன்னணி ஹீரோவை வைத்தே தனது புதிய படத்தையும் பண்ணலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

 

இதனால், வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடிக்கும் கனவோடு இருந்த சூரி, தற்போது அப்செட்டில் இருக்கிறாராம்.