Apr 22, 2020 03:01 PM

முன்னணி நடிகரை அந்த இடத்தில் உதைத்த வித்யா பாலன்! - வைரலாகும் வீடியோ

முன்னணி நடிகரை அந்த இடத்தில் உதைத்த வித்யா பாலன்! - வைரலாகும் வீடியோ

பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பாலன். இவர் பெங்காலி சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகி, பிறகு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கும் வித்யா பாலன், நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமான ‘தி டர்ட்டி பிக்டர்ஸ்’ படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

 

இந்தி திரைப்படம் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் வித்யா பாலன், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். தன் உடல் எடை குறித்து விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வித்யா பாலன், தைரியமான நடிகைகளில் மிக முக்கியமானவர் ஆவார்.

 

இந்த நிலையில், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமாருடன், வித்யா பாலன் அடிதடியில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், அக்‌ஷய் குமாரும், வித்யா பாலனும் ஒருவரை மாறி மாறி அடித்துக் கொள்ள இறுதியில் வித்யா பாலன், அக்‌ஷய் குமாரை அந்த இடத்தில் உதைக்க, அவர் குணிந்தபடியே ஓடுகிறார். இறுதியில் வெற்றி பெற்ற வித்யா பாலன், சாம்பியன் பட்டம் பெற்றது போல தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்.

 

Vidya Balan and Akshay Kumar

 

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், வித்யா பாலனும் அக்‌ஷய் குமாரும் போட்ட சண்டை, சீரியஸ் சண்டை அல்ல, சிரிப்பு சண்டை. ஆம், ‘மிஷன் மங்கள்’ படத்தின் படப்பிடிப்பின் போது, அக்‌ஷய் குமாரும், வித்யா பாலனும் விளையாட்டாக போட்ட சண்டை தான் தற்போது வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த சண்டை வீடியோ,